search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் மட்டம்"

    • தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.
    • அணையின் நீர் இருப்பு 67.06 டி.எம்.சியாக உயர்ந்துள்ளது.

    கர்நாடகாவில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகள் நிரம்பியது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்து வருகிறது.

    கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 506 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

    இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.70 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 1,18,296 கன அடியாக உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகாரிப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 67.06 டி.எம்.சியாக உயர்ந்துள்ளது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அணை நிரம்பி வரும் நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா என்று எதிர்பார்த்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது ஏரிக்கு நீர்வரத்து இல்லை. வெயிலும் அதிகரித்துள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி.

    இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த ஏரியால் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    ஏரிக்கு மேட்டூர் நீர், கீழணையில் இருந்து வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். மழை காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து காட்டாறுகள் மூலம் நீர் ஏரிக்கு தண்ணீர் வரும். தற்போது ஏரிக்கு நீர்வரத்து இல்லை. வெயிலும் அதிகரித்துள்ளது.

    இந்தச் சூழலில் சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 40.30 அடியாக உள்ளது.

    அதே நேரத்தில், தற்போது ஏரிக்கு நீர் வரும் 9 அடி உள்ள கீழணையில், 2.7 அடியாக குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.

    தற்போது சென்னைக்கு விநாடிக்கு 48 கனஅடியும், பாசனத்துக்கு விநாடிக்கு 100 கன அடியும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இது போல அனுப்பி வைக்கப்பட்டால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக சரிந்துவிடும். இதனால் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதை நிறுத்தும் நிலை ஏற்படும்.

    • பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடியாக நீர் அதிகரி க்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 74.43 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 267 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடியாக நீர் அதிகரி க்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 3,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.68 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.49 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்து உள்ளது.

    மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு வாரத்தில் 32 அடியாக உயர்ந்துள்ளது.
    • குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெப்பம் சலனம் காரணமாக பரவ லாக மழை பெய்து வருகிறது. அதேபோல் கடந்த 2,3 நாட்களாக கல்வராயன் மலையில் மாலை நேரங்க ளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கல்வராயன் மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரண மாக கல்படை ஆற்றின் வழியாக நேற்று முன்தினம் நிலவரப்படி 200 கன அடி நீரும் பிறகு படிப்படியாக குறைந்து தற்போது 150கன அடி வரை தண்ணீர் கல்படையாற்றின் வழியாக கோமுகி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டும் ஏற்கனவே 25 அடியாக இருந்த நிலையில் தற்போது ஒரு வாரத்தில் 32 அடியாக உயர்ந்துள்ளது. கோமுகி அணை நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கோமுகி அணை நீர்மட்டம் உயர்ந்து வரு வதால் கச்சிராயப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • மயிலம் வானுார், விக்கிரவாண்டி, புதுச்சேரி உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் தேவையான குடிநீர் ஆதாரமாக உள்ளது.
    • வீடூர் அணையின் மொத்த அளவு 32 அடியாகும் தற்போது நீர் 28.925 அடி உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் வீடூர் அணை கட்டு அமைந்துள்ளது. இதனால் மயிலம் வானுார், விக்கிரவாண்டி, புதுச்சேரி உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் தேவையான குடிநீர் ஆதாரமாக உள்ளது. 1959-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரால் வீடூர் அணை திறந்து வைக்கப்பட்டது. வீடூர் அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் தமிழ்நாடு, புதுச்சேரியில் 3200 ஏக்கர் நிலம் பாசனவசதியை பெறுகிறது.

    புதுச்சேரி, வானுார், மயிலம் பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பயன் பெறுகின்றனர். வீடூர் அணையின் மொத்த அளவு 32 அடியாகும் தற்போது நீர் 28.925 அடி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் மயிலம், விக்கிர வாண்டி ஒன்றியத்திலுள்ள சித்தணி, கணபதிபட்டு, ரெட்டிகுப்பம், எம்.குச்சிபாளையம் கயத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இந்த ஆற்றுப்படுகையில் இருந்து தண்ணீர் எடுத்து செல்கி்ன்றனர். விவசாயிகள் சம்பா பட்டத்திற்கு நாற்றங்கால் தயரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.

    நீர்பிடிப்பு பகுதியில் கன மழை நீடிப்பதால் பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    கூடலூர்:

    நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 3025 கன அடியாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து 132.80 அடியாக உள்ளது. அணையில் இருந்து 1850 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது. மூலவைகையாற்று பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாகவும் வைகை அணைக்கு நீர்வரத்து 3159 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 1190 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 60.47 அடியாக உள்ளது.

    கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் மழையால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 51 கன அடியாக உள்ளது. நீர்திறப்பு இல்லை. அணையின் நீர்மட்டம் 47.30 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.47 அடியாக உள்ளது. 68 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 10.9, கூடலூர் 3.5, உத்தமபாளையம் 1.2, சண்முகாநதி அணை 2, மஞ்சளாறு 47, சோத்துப்பாறை 10, வைகை அணை 11 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
    நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. #PeriyarDam #MullaPeriyar
    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருகிற 7-ந் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை தமிழகம் முழுவதும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 7388 கன அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 127.20 அடியாக இருந்தது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 131.30 அடியாக உயர்ந்துள்ளது. 2 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து 1670 கன அடி நீர் திறக்கப்படுகிறது.


    இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்தடைகிறது. வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட மூலவைகையாற்று நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து 3168 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 58.76 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1190 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.30 அடியாக உள்ளது. 55 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 30.2, தேக்கடி 28.6, கூடலூர் 16, சண்முகாநதி அணை 8, உத்தமபாளையம் 9.6, மஞ்சளாறு 3, கொடைக்கானல் 9 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #PeriyarDam #MullaPeriyar
    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கோரிய வழக்கில், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை கூட்டி முடிவெடுக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Mullaperiyar #MullaperiyarDam
    புதுடெல்லி:

    கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், திறக்கப்படும் தண்ணீர் இடுக்கி அணைக்கு வந்து சேருகிறது. இடுக்கி அணையும் நிரம்பியுள்ளதால் அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அணையின் பலம் குறித்து கேரள மக்களிடையே அச்சம் நிலவுவதால் அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 136 அடியாக குறைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இதற்கு பதில் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் அணை பாதுகாப்பாக இருப்பதால் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என கூறியிருந்தார்.

    இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 143 அடியில் இருந்து குறைக்க கோரி இடுக்கியை சேர்ந்த ரசூல்ராய் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முல்லைப் பெரியாறு அணை நீர் இருப்பு, நீர் மேலாண்மை தொடர்பாக நாளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    கூட்டத்தில், நீர்மட்டத்தை தற்காலிகமாக 139 அடியாக குறைப்பது குறித்து ஆராயுமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

    இது தொடர்பான அறிக்கையை நாளை பிற்பகல் 2 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய நீதிபதிகள், வழக்கை நாளைய தினத்துக்கு ஒத்தி வைத்தனர்.
    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். #MullapperiyarDam #EdappadiPalaniswami #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டது.

    இதையடுத்து 2014, 2015-ம் ஆண்டுகளில் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதன்பிறகு போதிய மழைப் பொழிவு இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக நீர்மட்டம் 142 அடியை எட்டவில்லை.

    அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்மட்டம் அணையின் உயர்ந்தது. நேற்று அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியது. நேற்று காலை 6 மணியளவில் நீர்மட்டம் 136.10 அடியாக இருந்தது. அதுவே அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் நேற்று இரவு நீர்மட்டம் 137 அடியை தாண்டியது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று 142 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் 13 மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு விநாடிக்கு 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் இடுக்கி அணைக்கு செல்கிறது. அந்த அணையும் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், செருதோணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

    அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் தேக்க கொள்ளளவை குறைக்க வேண்டும் என கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக வைகை அணை நீர் மட்டம் 45 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 856 கன அடி தண்ணீர் வருகிறது.
    கூடலூர்:

    கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியிலும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

    அணையின் நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து வருவதால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் வைகை அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் வைகை அணையின் நீர் மட்டம் இன்று 44.23 அடியை எட்டியது. அணைக்கு 856 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1324 மில்லியன் கன அடியாக உள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 127.10 அடியாக உள்ளது. வரத்து 1408 கன அடி. திறப்பு 1400 கன அடி. இருப்பு 4072 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 41.20 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 124.94 அடி. பெரியாறில் 15, தேக்கடியில் 7 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    தென் மாவட்டங்கள் பயன்பெறும் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்காவிட்டால் போராட்டம் நடைபெறும் என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    மேலசொக்கநாதபுரம்:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் போடி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென் மாவட்டங்கள் பயன்பெறும் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்க முன்வராத மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கிறோம். தேனி மாவட்டத்தில் விவசாய பம்பு செட்களுக்கு மின் மீட்டர் பொருத்துவதை கைவிட வேண்டும். பெரியாறு அணையில் ஏற்கனவே இருந்த மின் இணைப்பை கேரள அரசு பாதுகாப்பு கருதி மீண்டும் வழங்க வேண்டும்.

    மத்திய தொழில் படையை பாதுகாப்புக்காக நிறுவ வேண்டும். இதே போல் பேபி அணையை பலப்படுத்த கட்டுமானப் பணிகளை செய்ய வேண்டும். பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்குவதற்கு அனுமதி அளிக்காவிட்டால், அனைத்து விவசாயிகளையும் திரட்டி விரைவில் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #PeriyarDam
    ×